×

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறி நிலை: துஷ்யந்த் சவுதாலாவுடன் காங்கிரஸ் திடீர் பேச்சுவார்த்தை

சண்டிகர்: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழல் உள்ளதால் மூன்றாவது அதிக இடங்களை பெறும் நிலையில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷயந்த் சவுதாலாவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனாவார். எனவே குடும்ப சண்டையில் இந்திய தேசிய லோக்தள கட்சியில் இருந்து வெளியேறிய துஷ்யந்த் ஓராண்டுக்கு முன்பாக ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கினார். தற்போது அவரது பாரம்பரிய குடும்ப கட்சியான லோக்தளத்தை விடவும் அதிக இடங்களில் துஷ்யந்தின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுக்கும் சூழல் உள்ளதால் துஷ்யந்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபந்திர ஹூடா, துஷ்யந்த் சவுதாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிதயதாகவும் இன்று மாலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Trial ,Haryana ,Congress ,assembly elections ,Dushyant Chaudala ,Haryana Assembly ,talks , Haryana, Assembly election, stagnation, Dushyant Chaudala, Congress, Negotiations
× RELATED அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி